கணவன்- மனைவிகளின் கவனத்திற்கு!

Report Print Printha in உறவுமுறை

பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் பல பிரச்சனைகள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது.

இதுபோன்று வரும் பிரச்சனைகளின் தீர்வு தான் என்ன? ஏன் உருவாகிறது? தன் மேல் ஏது தவறு உள்ளதா? என யாரும் யோசிப்பதில்லை.

சில நேரங்களில் சிறிய பிரச்சனைகள் கூட பெரிதாகி உறவுகளில் பிரிவு ஏற்படக் காரணமாக இருக்கிறது.

  • பிரிவுக்கு முதல் காரணமாக விளங்குவது பணம், ஏனெனில் இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது. இதனால் ஆண்கள் தன்னுடைய மனைவி, குழந்தைகளுக்காக சம்பாதிப்பதிலேயே கவனம் செலுத்தி குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்காமல் விடுகின்றனர். இது சில நேரங்களின் பிரச்சனையில் முடிகிறது.
  • மனைவியானவள் தன் கணவன் அருகில் இருக்க வேண்டும், தன்னிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்நோக்கும் போது, அவர்கள் தன் மனைவியின் எண்ணங்களை பூர்த்தி செய்யாமல் இருப்பதால், சண்டை வருகிறது.

  • கணவன், மனைவியிடம் தன்னை மட்டும் இந்த சமூகத்தில் ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும். என்று எதிர்பார்ப்பார்கள். அப்போது குழந்தைகள், தாய் வீட்டு பிரச்சனைகள், அலுவலகம் என்று மனைவிகள் பிஸியாக இருப்பது கணவன்களுக்கு எரிச்சலூட்டுகிறது.
  • கணவனின் குடும்பத்தாரை மனைவி குறைகள் சொல்வதின் மூலமோ அல்லது மனைவியின் குடும்பத்தாரை கணவன் குறைகள் சொல்லும் போதோ உறவில் பிரிவுகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

மேலும் இது மாதிரியான பிரிவுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொள்ளாததே.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments