நீர்த்தொட்டி பிரசவமுறை என்றால் என்ன? யார் எல்லாம் தவிர்க்க வேண்டும்?

Report Print Kavitha in கர்ப்பம்
1676Shares

நீர்த்தொட்டி பிரசவமுறை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடையே இருந்த வழக்கம்தான்.

கிராமங்களில் கர்ப்பிணிகளின் வயிற்றில், மிதமான சூட்டில் உள்ள நீரைத் தொட்டு ஒத்தடம் கொடுத்து பிரசவிக்க வைப்பார்கள். இதனால், கர்ப்பிணிகளுக்கு வலி குறையும், பிரசவமும் எளிதாகும்.

இதைத்தான் வெளிநாடுகளில் “வாட்டர் பர்த்” என்ற பெயரில் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நீர்த்தொட்டி பிரசவமுறை என்றால் என்ன? இதனை எந்த மாதிரியான கர்ப்பிணிகளுக்கு ஏற்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நீர்த்தொட்டி பிரசவமுறை என்றால் என்ன?

 • வாட்டர் பர்த் பிரசவ முறையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் கர்ப்பிணியை அமர செய்ய வேண்டும்.

 • வெதுவெதுப்பான நீர், வலியைக் கொஞ்சம் குறைவாக உணர வைக்கிறது.

 • நீர்த் தொட்டிக்குள் அமர்ந்திருக்கும் கர்ப்பிணிக்கும் மயக்க ஊசிகளோ, மருந்துகளோ செலுத்தப்படாது.

 • அந்தப் பெண்ணுக்குப் பிரசவிக்க எந்த பொசிஷன் வசதியாக இருக்குமோ அதற்கு ஏற்ப தொட்டிக்குள் அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ குழந்தையைப் பிரசவிக்கலாம்.

 • பிரசவிக்கும் நேரத்தில் அருகில் அவரின் கணவரோ, அம்மாவோ அல்லது உறவினர் யாரேனும் ஒருவரோ இருக்கலாம்.

 • செயற்கையான எந்தவொரு பிரசவ கருவிகளும் பயன்படுத்தப்படாது. இந்த இரண்டு முறைகளிலும் பிரசவிக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடி வெட்டப்பட்டு குழந்தைக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் போடப்படும்.

இயற்கை முறை பிரசவத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்?

 • இயற்கை முறை பிரசவமும் சுகப்பிரசவமும் ஏறக்குறைய ஒன்றுதான்.

 • சுகப்பிரசவத்தில் வலி குறைவதற்காகவும், பிறப்புறுப்பு எளிதில் திறந்து பிரசவம் சுலபமாவதற்கும் ஊசி,ஜெல் போன்றவை பயன்படுத்தப்படும்.

 • ஆனால், இயற்கை முறை பிரசவம் அப்படியல்ல. இதில் எந்தவித ஊசி, மருந்துகளும் பயன்படுத்தப்படாது.

யார் எல்லாம் தவிர்க்க வேண்டும்?

 • நீங்கள் 17 வயதுக்குக் குறைவானவர் அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடாது.

 • குறைப்பிரசவமாக இருந்தால் இம்முறை பரிந்துரைக்கப்படாது.

 • நீரிழிவு இருந்தால் இதைத் தவிர்க்க வேண்டும்.

 • உங்களுக்கு இரட்டையர்கள் அல்லது அதற்கு மேல் குழந்தைகள் கருவிலிருந்தால் இம்முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கமாட்டார்கள்.

 • குழந்தையின் எடை அதிகமாக இருந்தாலும் இம்முறை தவிர்க்கப்படும்.

 • தாய்க்கு தொற்று இருந்தால் கூட தவிர்க்க வேண்டும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்