பெண்களே! இயற்கை முறையில் கருப்பையை பலப்படுத்தணுமா? இந்த முறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in கர்ப்பம்

தாய்மை என்ற பெருமையை பெண்களுக்கு தருவது கருப்பை தான். இதனை ஆரோக்கியமான முறையில் பாதுகாப்பது சிறந்த முறை ஆகும்.

ஏனெனில் கருப்பையின் உட்சுவர் சீராக (Endometrium) வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் ஹார்மோன்கள் சுரக்கின்றது.

கருப்பையின் உட்சுவர் மெலிதாக (homogeneous) இருக்கும். அது படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்குச் சிறந்தாகும்.

மேலும் ஸ்கேனில் heterogeneous அல்லது Triple layer எனக் குறிப்பிடும் வளர்ச்சி கருவுறுவதற்கு வசதியாக அமையும்.

இத்தகைய கருப்பையை ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்புடன் பலத்துடன் வைத்து கொள்ளவது அவசியமாகும்.

அந்தவகையில் கருப்பையை பலப்படுத்து உணவு மற்றும் சித்த வைத்திய மருந்துகளை பற்றியும் பார்ப்போம்.

  • உளுந்தை மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்குக் காலை உணவாகத் தொடர்ச்சியாக உண்டுவருவது பலனளிக்கும்.
  • ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக காலை மாலை இரு வேளையும் அருந்தலாம்.
  • பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் சாப்பிடவும்.
  • கற்றாழையால் செய்யப்படும் குமரி லேகியம், குமரி பக்குவத்தை உண்டுவரலாம்.
  • சதாவேரி லேகியத்தை ஆல விதைப் பொடியுடன் அயச்செந்தூரம் தேனில் கலந்து உண்ணலாம்.
  • மாதவிடாய் நாட்களில் இரு வேளை இலந்தை இலை சுத்தம் செய்தது ஒரு கைப்பிடி, பூண்டு ஐந்து, மிளகு மூன்று ஆகியவற்றை நீர் விட்டு அரைத்து மோரில் கலந்து குடிப்பது நல்லது.
கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை
  • உடல், உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள்.
  • குறைந்தது 45 நிமிட நடைப்பயிற்சி அல்லது திறந்த வெளி விளையாட்டு உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும்.
  • எளிய யோகாப் பயிற்சிகயை மேற்கொள்வது.
  • மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...