கர்ப்ப காலத்தில் மார்பகத்தை எந்தவித தொற்று இல்லாமல் சுத்தமாக எப்படி பராமரிப்பது ?

Report Print Kavitha in கர்ப்பம்

பொதுவாக ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததும் அவள் உடம்பில் ஏராளமான மாற்றங்கள் நிகழும்.

அதில் குறிப்பாக மார்பகங்களில் ஏற்படும் மாற்றமே முக்கியமானது ஆகும்.

ஏனெினல் தாய்ப்பால் சுரப்பிற்கு தகுந்த மாதிரி மார்பகங்கள் வளர்ச்சி அடையும், மார்பக திசுக்கள் மாற்றமடையும், புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு பால் சுரப்பு ஏற்படும்.

இந்த காலங்களில் மார்பகங்களை கவனமாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

அந்தவகையில் கர்ப்ப காலங்களில் மார்பகங்களை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கலாம் என பார்ப்போம்.

மார்பகங்களை எப்படி பராமரிப்பது?

Google

  • கர்ப்ப காலத்தில் மார்பகம் பெரிதாக ஆரம்பித்ததும் சரியான உள்ளாடையை தேர்ந்தெடுக்க வேண்டும்.காட்டன் வகை உள்ளாடை, சாஃப்ட் பேடிங் உள்ளாடை சிறந்தது. எனவே உள்ளாடை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

  • மார்பகத்தில் உள்ள தோல் விரிவடைவதால் மார்பக காம்புகளில் பிளவு, வெடிப்பு உண்டாகும். எனவே வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கொண்டு மெதுவாக விரல்களால் மசாஜ் செய்து விடலாம். இது உங்கள் மார்பகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

  • கர்ப்ப கால கடைசி மாதத்தில் சீம்பால் சுரக்க ஆரம்பிக்கும் காலத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு மார்பக காம்புகளை மசாஜ் செய்யலாம். இது மிருவாக்கி வெடிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளும். குளிக்கும் போது பெருவிரல் ஆள்காட்டி விரலால் மார்பக காம்புகளை இழுத்து விடலாம். இது பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

  • சோப்பை பயன்படுத்தும் போது மார்பக சருமத்தில் அரிப்பு, வெடிப்பு, புண்கள் ஏற்பட்டுவதனால் மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.

  • மார்பக சருமம் விரிவடையும் மார்பக காம்புகளில் புண்கள், வெடிப்பு ஏற்படும், மேலும் குளிக்கும் போது அதிகமாக தேய்ப்பதால் மார்பக சருமத்தில் உள்ள எண்ணைப் பசை நீங்கி வறண்டு போகும். இதை போக்க பெட்ரோலியம் ஜெல்லி, பிரிட்ஜ் வைத்த கற்றாழை ஜெல் போன்றவற்றை அப்ளே செய்யலாம். வறட்சியை போக்கி குளுகுளுப்பையும், ஈரப்பதத்தையும் தக்க வைக்கும்.

  • வெதுவெதுப்பான நீரில் ஓட்ஸ் மீல் போட்டு குளியுங்கள். பிறகு சாதாரண நீரில் மார்பகத்தை கழுவி விடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

  • கர்ப்ப காலத்தில் பால் கசிய ஆரம்பிக்கும் போது ப்ரீஸ்ட் பேடு களை உள்ளாடையில் வைத்து பயன்படுத்தும் போது ஈரப்பதத்தை உறிஞ்சி மார்பக காம்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். இது மார்பகத்தில் பால் கட்டுவதால் ஏற்படும் வலியை குறைக்கவும், ரிலாக்ஸ் தரவும் உதவுகிறது.

  • தினமு‌ம் பிராவை மாற்றி விடுங்கள். இல்லையென்றால் வியர்வை அழுக்கால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விடும்.

  • புஷ் அப் பிராக்கள் அணிய வேண்டாம். இது மார்பகத்தில் பாலைக் கட்ட வைத்து முலையழற்சியை உண்டாக்கி விடும்.

மார்பக காம்பு எப்படி பாதுகாப்பது?

நாம் அணியும் உள்ளாடைகள் மார்பக காம்புகளில் உரசும் போது ஒரு வித வலியும் அசெளகரியமும் ஏற்படுகிறது.

எனவே மார்பக காம்புகளை பாதுகாக்க கடைகளில் நிப்பிள் ப்ரக்டக்ரர்ஸ் கிடைக்கிறது. இதை வாங்கி உபயோகிக்கலாம். இது தடுப்பான் மாதிரி செயல்பட்டு ஆடை உரசாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்