சீக்கிரம் கர்ப்பம் தரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Report Print Kavitha in கர்ப்பம்

பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாக கருப்பை விளங்குகின்றது.

இது தான் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பையே உருவாக்குகிறது.

அந்தவகையில் பெண்கள் தங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

JAENGPENG/GETTY IMAGES

  • காய்கறிகளில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் அதிகமான காய்கறிகளை எடுத்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை விரட்டி விடலாம்.

  • பழங்களில் வைட்டமின் சி, பயோப்ளேவோனாய்டு போன்றவைகள் உள்ளன. இவைகளும் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை தடுக்கிறது. னவே பசிக்கும் போது பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • பால் பொருட்களான யோகார்ட், சீஸ், பால் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

  • பெண்கள் 8 வாரங்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை குறைத்து விடலாம்.

  • கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற குளிர்ந்த நீரில் வாழும் மீன்களில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பெண் உடம்பில் உள்ள புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியை குறைக்க உதவுகிறது.

  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள். தினமும் காலையில் குடித்து வாருங்கள். இது உங்கள் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • ஒரு நாளைக்கு 2-4 கப் கீரை டீ குடித்து வாருங்கள். அதே மாதிரி பச்சை காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் கருப்பையின் ஆரோக்கியத்திற்கு தேவையான போலிக் அமிலம் போன்றவை உள்ளதால் இவை உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை வளர உதவி புரிகிறது.

  • பாதாம் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை எடுத்து சாப்பிடுங்கள். இதில் அதிகளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

  • விளக்கெண்ணெய் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் கருப்பை நீர்க் கட்டிகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள ரிகோனோலிக் அமிலம் உங்கள் நோயெதிப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது கருப்பை தொற்றுகளை போக்கும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்