கர்ப்பகாலத்தில் பரசிட்டமோல் எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in கர்ப்பம்

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நோய் நிவாரணியான பரசிட்டமோலை உட்கொள்வதன் பாரதூரமான விளைவு தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது குழந்தைகளில் அறிவாற்றல் பிரச்சினை மற்றும் நடத்தைப் பிறழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த ஆய்வுக் குழுவிற்கு தலைமை வகித்த Jean Golding என்பவர் கூறுகையில், கர்ப்பகாலத்தில் பெண்கள் பொதுவாக நோய் நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்வது ஆபத்தானது என தெரிவித்துள்ளார்.

எனினும் கர்ப்பகாலங்களில் மாற்று வலி நிவாரணியாக பரசிட்டமோல் தேசிய சுகாதார சேவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்