கர்ப்பிணிப் பெண்களே! சுகபிரசவத்திற்கு இதோ எளிய வழிகள்

Report Print Kavitha in கர்ப்பம்

கர்பிணிப் பெண்களுக்கு ஆங்கில மருத்துவத்தை விட நமது பாரம்பரிய மருத்துவத்துவமே சிறந்த முறை என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் பிரசவத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய சில எளிய வழிமுறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

  • கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பகால வாந்தி, ரத்தசோகை, முதல் ட்ரைமெஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுக்கள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும்.
  • காரணமற்ற வெள்ளைப்போக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுந்தங்கஞ்சி சிறந்த தீர்வைத் தருபவை.
  • கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கர்ப்பப்பையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நல்லது.
  • ஃபோலிக் அமிலம் நிறைந்த தாமரைப்பூ, தக்கோலம், நெய்தல் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் வலி நிவாரணியாகவும் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றலும் இரும்பு மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தவை ஆகும்.
  • வண்ணங்கள் நிறைந்த பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி சாதம் ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டியவை.
  • முருங்கைக்கீரை, பாசிப் பருப்பு கலந்த பொரியல், கேழ்வரகு அடை போன்றவற்றை சாப்பிடலாம்.
  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு தினமும் நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், இரவில் கடுக்காய் பிஞ்சு ஆகியவற்றைச் சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
  • கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு சர்க்கரைநோய் (Gestational Diabetes) ஏற்படும். இதற்கு வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத உணவையும் கொடுக்கவேண்டியது அவசியம்.
  • தினமும் உணவில் வெந்தயத்தையும் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்கொள்வது கூடுதலாக நல்லது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers