கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் காபி குடிக்கலாமா?

Report Print Kavitha in கர்ப்பம்

கர்ப்பிணி பெண்கள் காபி அருந்துவது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

50 ஆயிரத்து 943 கர்ப்பிணிகளிடம் காபி அருந்துவது குறித்து, சமீபத்தில் சுவீடன் நாட்டில் சால்கிரென்ஸ்கா பல்கலைக்கழக பேராசிரியர் வெரெனா செங்பையீல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியுள்ளது.

அதில் அதிகமாக காபி அருந்தும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடனோ அல்லது பருமனாகவும் இருக்கக்கூடும் என்ற தகவல் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறைவாக காபி எடுத்து கொண்ட தாய்மார்களை விட அதிக காபி எடுத்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 5 வயது ஆகும்போது உடல் அதிக பருமனாகும் சாத்தியமும் அதிக வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் ஒரு நாளைக்கு அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் காபி பருகக்கூடாது என சுவீடனின் தேசிய உணவுக்கழகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய சுகாதார ஆய்வில் ஒன்றாக இது கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...