மகப்பேற்றுக்கு முற்பட்ட காலங்களில் வழங்கப்படும் Tdap மன இறுக்கத்திற்கு காரணமாவதில்லை

Report Print Givitharan Givitharan in கர்ப்பம்

தாய்மார் tetanus, diphtheria, acellular pertussis (Tdap) போன்ற தடுப்பூசிகளைப் பெறுவது பிற்காலத்தில் பிள்ளைகளில் மன இறுக்கத்தைக் கொண்டுவராது என புதிய ஆய்வுகள் சொல்லுகின்றன.

"முடிவுகள் Tdap தடுப்பூசியானது தொற்றுக்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நிணநீர் போக்குகளைப் பாதிக்கின்றது, இது வேறு வழியில் நரம்பியல் வளர்ச்சி மாற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும்" என ஆய்வாசிரியர் கூறுகின்றார்.

குழந்தைகளை இருமலிலிருந்து பாதுகாக்க கர்ப்ப காலத்தின் 27வது, 36வது காலப்பகுதிகளில் தாய்மார்கள் Tdap எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுவதுண்டு.

ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட 82 000 குழந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2012 இல் 26% ஆகவிருந்த தடுப்பூசி வழங்கல் 2014 இல் 79% ஆக அதிகரித்திருந்தமை இனங்காணப்பட்டது.

கிட்த்தட்ட 1.6 வீதமானோர் மட்டுமே மன இறுக்க வியாதியுடன் அறியப்ட்டிருந்தனர். அவர்களில் Tdap எடுத்திருந்த தாய்களின் பிள்ளைகளில் 1000 இற்கு 3.78 பேர் மேற்படி நோயுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். இத் தொடர்பு Tdap எடுத்திராத தாய்மார்களின் பிள்ளைகளில் 1000 இற்கு 4.04 ஆகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers