உள்ளாட்சி தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறதா?

Report Print Fathima Fathima in அரசியல்
உள்ளாட்சி தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறதா?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு மக்கள்நலக்கூட்டணியுடன் இணைந்ததே காரணம் என தொண்டர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள்நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிட வேண்டும் என தலைவர்கள் விரும்புகின்றனர், இதற்காக விஜயகாந்தை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதனை தெரிந்து கொண்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாததாக தெரிகிறது.

மேலும் ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிட்டால் எப்படி ஜெயிக்க முடியும், பணத்தை செலவழித்து தேர்தல் வேலைகளை பார்த்தாலும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது எனவும் புலம்பி வருகின்றனராம்.

ஒருவேளை கட்சி செலவழித்தால் போட்டியிட தயார் எனவும் பலர் கூறிவருகின்றனர்.

இதற்கிடையே தேமுதிக-வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வேறு கட்சியில் இணைவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் விஜயகாந்த்.

இதற்கு ஒரே தீர்வாக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments