ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியடைந்த வைத்திலிங்கத்திற்கு ராஜ்யசபா எம்.பி சீட்

Report Print Basu in அரசியல்

இன்று நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் மாநிலங்களவைக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களான அதிமுகவில் நவநீதி கிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன்,

காங்கிரஸில் சுதர்சன நாச்சியப்பன், திமுகவில் கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோரின் பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், இந்த காலியிடங்களுக்கு ஜூன் 11ம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24ம் திகதி தொடங்குகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்ற பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார் மற்றும் த.மா.கா.வில் இருந்து தற்போது அ.தி.மு.க.வில் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இவர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments