கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

Report Print Kamel Kamel in அரசியல்
1213Shares

கார் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோருக்கு அரசாங்கம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆயிரம் சீ.சீக்கு குறைவான சிறிய ரக மோட்டார் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சினால் இந்த வரி உயர்த்துகை குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்த வகையிலான கார்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனையடுத்தே ஆயிரம் சீ.சீக்கு குறைவான சாதாரண மோட்டார் காருக்காக இதுவரை அறவீடு செய்யப்பட்டு வந்த 14 இலட்சம் ரூபா வரி 15 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆயிரம் சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் காருக்காக இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு வந்த 8.5 இலட்சம் ரூபா வரி 12.5 இலட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்