மடு. கல்வி வலயத்தில் இடம்பெற்ற முதல் மாணவர் பாராளுமன்ற அமர்வு

Report Print Ashik in பாராளுமன்றம்

மடு.கல்வி வலய பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம்(15) காலை 10 மணியளவில் ஆண்டாங்குளத்தில் அமைந்துள்ள மடு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள், மடு வலயக்கல்விப்பணிப்பாளர் லூ.மாலினி வெனிற்றன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முதல் அமர்வு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் மாணவர் பாராளுமன்ற அமர்வின் நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

இதேவேளை, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் பி.செல்வின் இரேனியஸ், மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி உற்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் பாராளுமன்றம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்