விமான கடவுச்சீட்டு மற்றும் அதிவேக வீதி பயண கட்டணங்களில் மாற்றம்

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

விமான கடவுச்சீட்டு கட்டணத்திலும், அதிவேக வீதிகளுக்கான பயண கட்டணங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் வாசிக்கப்பட்டது.

இதன்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கையில் அதிவேக வீதிகளில் அறவிடப்படும் பயண கட்டணமானது 100 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை விமான கடவுச்சீட்டு கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாராளுமன்றம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்