இலங்கையின் விதியை தீர்மானிக்கும், கதவின் பின்னால் இருக்கும் மனிதர்கள்

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

கதவின் பின்னால் இருக்கும் சில வயதான மனிதர்கள் இலங்கையின் விதியை தீர்மானிப்பதாக ஐக்கிய நாடுகளின் இளைஞர் பிரதிநிதி ஜயத்மா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளரால் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட ஜயத்மா விக்ரமசிங்க, ஆசியாவின் பழைய ஜனநாயகம் பரீட்சிக்கப்படுகிறது என்று தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் அரசியல்வாதிகள், ஜனநாயகத்தை மதித்து பிரச்சினைகளுக்கு வெளிப்படையான தீர்வுகளை காணவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மேலும் பாராளுமன்றம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்