இதோ எயார்டெல் லங்கா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வியக்கத்தக்க பக்கேஜ்!

சாப்பிடுதல், தூங்குதல், வேலை செய்தல் ஆகியவை அடிப்படை மனித தேவைகள். ஆனாலும், மனிதனின் தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதற்கு மிக அவசியமானதாய் இருப்பது உரையாடல்.

அந்த வகையில், பேச்சுத்தொடர்பு கொள்வதற்கான இயல்பான தேவையை நாம் கொண்டிருக்கிறோம். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உரையாடல் உதவுகிறது.

பேச்சு என்னும் மகத்தான வரம் மனிதருக்கு இயல்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், நாம் உரையாடுவதற்கு ஏற்றபடி உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் கூடிப்பழகும் இயல்புடையவர்களாய் இருக்கும்படி கடவுளால் படைக்கப்பட்டோம். பேசும் வாய்ப்பு உங்களுக்கு இல்லையென்றால், அல்லது பேச்சுத்தொடர்பு கொள்ளக்கூடிய உங்கள் திறமையை எவராவது எடுத்துப்போட்டால், அது ஒரு தண்டனையைப்போல இருக்கிறது.

நீங்கள் உரையாடும்போது, ஒரு மதிப்புவாய்ந்த காரியம் நிகழ்கிறது. நீங்கள் உங்களைப்பற்றி சிறந்த உணர்வு கொள்கிறீர்கள்; மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதை அறிவதிலிருந்து பயனடைகிறீர்கள்.

அந்த வகையில் சமகாலத்தில் மனிதன் உரையாடலை பல்வேறு வகைகளில் மேற்கொள்கின்றான். அதில் பிரதான ஒன்று தொலைபேசி உரையாடல். இந்த தொலைபேசி உரையாடல் மனிதனின் நேரத்தையும், பணத்தையும் சேமிக்க மிகவும் உதவுகின்றது.

இந்நிலையில், இலங்கையில், பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் இருக்கின்ற போதிலும், தொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் எயார்டெல் லங்கா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, வெறும் 98 ரூபா விலைக்கு, வரையறையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியைக் கொண்ட புதிய சேவையை எயார்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

“கதை பஸ்” (கதா பஸ்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டமானது, எயார்டெல் வழங்கும் முற்கொடுப்பனவு இணைப்புகளை மேலும் வலிமைப்படுத்தி, வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மை, சௌகரியம் மற்றும் இலகுத் தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

இந்த ரீசார்ஜ் பெக்கின் விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.எயார்டெல் இலக்கங்களுக்கான வரையறையற்ற அழைப்புகளுக்கு மேலாக, ரீசார்ஜ் அட்டையினூடாக 1000 குறுஞ் செய்திகளும் 100 எம்.பி டேட்டா வரை 30 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.

மேலும், வாடிக்கையாளர்களின் சகல மொபைல் தேவைகளையும் ஒரே ரீசார்ஜ் பெக்கில் இணைக்கும் நோக்கில் இந்த பெக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுடன், நம்பகமான சேவைகளை பெற்றுக் கொடுக்கும் தனது உறுதிமொழியை எயார்டெல் லங்கா நிறைவேற்றியுள்ளது.

அத்துடன், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வழிமுறையை பின்பற்ற எதிர்காலத்திலும் மேலும் பல புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகம் செய்ய எயார்டெல் லங்கா எதிர்பார்த்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தமது SIM அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கைகளை facebook.com/airtellife எனும் இணையப்பக்கத்துக்கு பிரவேசித்து மேற்கொள்ள முடியும்.

அதேபோன்று https://www.promopage.lk/airtel-new-sim/ என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தும் எயார்டெல் SIM அட்டைகளை வாடிக்கையாளர்கள் இலகுவாக வீட்டு முகவரிக்கே பெற்றுக் கொள்ளலாம்.

ரீசார்ஜ் பெக்களை நாடு முழுவதிலுமுள்ள எந்தவொரு எயார்டெல் ஸ்ரோர்களிலிருந்தும் கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், MyAirtel App அல்லது https://recharge.airtel.lk/ ஊடாக செயற்படுத்திக் கொள்ள முடியும்.