கூகுள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு 12 விரைவில் வெளியீடு?

Report Print Kavitha in ஏனைய தொழிநுட்பம்
0Shares

அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பல்வேறு புது அம்சங்களை கூகுள் நிறுவனம் வழங்குவதோடு, இன்டர்பேஸ் அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 டெவலப்பர் பிரீவியூ பிப்ரவரி 17 ஆம் தேதியும், ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் வெர்ஷன் செப்டம்பர் 2 ஆம் தேதியும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 2-இல் ஆண்ட்ராய்டு 12 வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் டிசைன் கான்செப்ட் விவரங்களில் பல்வேறு விபரங்கள் கூறப்பட்டுள்ளன. அவை,

  • ஆண்ட்ராய்டு 12 தளத்தில் புது நோட்டிபிகேஷன் யுஐ இடம்பெற்று இருக்கும்.

  • குவிக் செட்டிங்ஸ் ஐகான்களின் எண்ணிக்கை ஆறில் இருந்தது நான்கு என குறைக்கப்படுகிறது.

  • ஐகான்கள் முன்பை விட பெரிதாக இருக்கிறது.

  • தேதி மற்றும் கடிகாரம் உள்ளிட்டவை டிஸ்ப்ளேவின் முன்புறத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

  • வலதுபுறத்தில் புதிதாக பிரைவசி இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன.

  • இதனை க்ளிக் செய்தால் எந்தெந்த செயலிகள் ஸ்மார்ட்போனின் மைக்ரோபோன் மற்றும் கேமரா விவரங்களை இயக்குகின்றன என்ற விவரங்களை அறிய முடியும்.

மேலும் இவைதவிர புதிய தளத்தில் மேலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்