விண்டோஸ் பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள மகிழ்ச்சிகரமான தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
45Shares

மைக்ரோசொப்ட்டின் இயங்குதள வரிசையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருந்த இயங்குதளமாக விண்டோஸ் 7 காணப்படுகின்றது.

இவ் இயங்குளம் அறிமுகம் செய்யப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகியுள்ளது.

இதன் பின்னர் விண்டோஸ் 8, விண்டோஸ் 10 போன்ற இயங்குதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான சப்போர்ட் அனைத்தையும் மைக்ரோசொப்ட் நிறுத்தியுள்ளது.

இதனால் பயனர்கள் விண்டோஸ் 8, விண்டோஸ் 10 போன்ற இயங்குதளங்களை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

எனினும் சில வசதிகள் காரணமாக தற்போதும் விண்டோஸ் 7 இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்கள் இருக்கவே செய்கின்றனர்.

இவர்களுக்காக எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி வரை விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் குரோம் உலாவிக்கான சப்போர்ட்டினை தரவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை பல பெரிய நிறுவனங்களும் தற்போது வரை விண்டோஸ் 7 இயங்குதளத்தினைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்