டுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி: டீஆக்டிவேட் செய்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அண்மையில் வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்டும் குறுஞ்செய்திகள் தானாக அழியக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் என்பவற்றிலும் இவ்வாறான வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக டுவிட்டரிலும் ஸ்டோரிக்கள் 24 மணிநேரத்தில் தானாகவே அழியக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதியானது Fleets என அழைக்கப்படுகின்றது. இவ் வசதியினை பல பயனர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

எனினும் இவ் வசதியினை பயன்படுத்த விருப்பம் இல்லை எனில் டீஆக்டிவேட் செய்துகொள்ள முடியும்.

ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய டுவிட்டர் பதிப்பினை அப்டேட் செய்த பின்னர் அப்பிளிக்கேஷனை திறந்துகொள்ளவும்.

மேற்பகுதியில் தென்படும் வட்டத்தினை அழுத்தி பிடிக்கவும். தோன்றும் பொப்பப் மெனுவில் Mute செய்ய வேண்டிய கணக்கினை தெரிவு செய்யவும்.

அதன் பின்னர் Mute Fleets என்பதை கிளிக் செய்யவும். இவ்வாறே ஏனைய கணக்குகளிற்கும் செய்ய முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்