முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பது தெரிந்ததே.
விளம்பரதாரர்களிடமிருந்து பெறப்படும் பணத்தில் ஒரு தொகுதியை யூடியூப் நிறுவனம் எடுத்துக்கொண்டு அந்த விளம்பரங்களை காண்பிக்கும் வீடியோக்களுக்கு சொந்தக்காரர்களுக்கும் மிகுதித் தொகையை கொடுக்கின்றது.
இது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் தற்போது வெளியாகியுள்ள தகவல் ஒன்று பேரிடியாக அமைந்துள்ளது.
அதாவது யூடியூப் வீடியோவில் காண்பிக்கப்படும் அனைத்து விளம்பரங்களுக்குமான கட்டணத்தை இனி அதன் உரிமையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்காது என்பதே அச் செய்தியாகும்.
இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட விளம்பரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானங்கள் மாத்திரமே வீடியோ கிரியேட்டர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இதற்கு ஏற்றாற்போல் யூடியூப் நிறுவனம் தனது கொள்கையினை (Policy) மாற்றியமைக்கவுள்ளது.
இந்த தகவலானது வீடியோ கிரியேட்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.