Zoom மீட்டிங்கில் அநாமதேய நபர்கள் நுழைவு: தடுக்க புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
8Shares

வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு மாத்திரமன்றி கல்விச் செயற்பாடுகளை மாணவர்கள் வீட்டிலிருந்து தொடர்வதற்கும் மிகவும் பயனுள்ள அப்பிளிக்கேஷனாக Zoom காணப்படுகின்றது.

பல பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்டிருந்த போதிலும் அவற்றில் பெரும்பாலானவை நீக்கப்பட்டு தற்போது ஒரு சிறந்த அப்பிளிக்கேஷனாக Zoom வலம் வருகின்றது.

எனினும் Zoom தொடர்பாடலில் அநாவசியமானவர்கள் உள்நுழைந்து அசௌகரியத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

Zoom தொடர்பாடலுக்குரிய பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல் என்பன பொது வெளியில் பகிரப்படுவதனால் இவ்வாறு அநாவசியமானவர்களும் உள்நுழையும் சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே இவ்வாறானவர்கள் தொடர்பில் ரிப்போர்ட் செய்யக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பயனர்கள் குறித்த அநாமதேய நபர் தொடர்பில் அட்மினிற்கு தெரிவிப்பதன் மூலம் அவரை தடை செய்யக்கூடிய முறையில் இவ் வசதி தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்