கட்டுப்பாட்டினை நீக்கும் Zoom: மகிழ்ச்சியின் உச்சத்தில் பயனர்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போதைய நிலையில் வீட்டிலிருந்து பணியாற்றும் பலரினாலும் உச்சரிக்கப்படும் வார்த்தையாக Zoom காணப்படுகின்றது.

வீடியோ கொன்பரன்ஸ் வசதியினை தரும் இச் சேவையில் இலவச சேவை மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட சேவை என்பன காணப்படுகின்றன.

இலவச சேவையில் அதிகபட்சம் 40 நிமிடங்கள் வரையே வீடியோ கொன்பரன்சில் ஈடுபட முடியும் என அண்மையில் Zoom நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இக் கட்டுப்பாட்டினை நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து 27 ஆம் திகதி காலை 6 மணி வரை இக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது.

இதற்கிடையான காலப் பகுதியில் எவ்வளவு நேரமானாலும் இலவசமாக வீடியோ கொன்பரன்சில் ஈடுபட முடியும்.

பல பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்ட நிலையிலும் தொடர்ந்து தம்முடன் இணைந்திருக்கும் பயனர்களுக்காக இச் சலுகை வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்