யூடியூப்பின் அதிரடி முடிவு: இவ் வருடம் இடம்பெறவுள்ள மாற்றம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
15Shares

முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் ஆனது ஒவ்வொரு வருடமும் Rewind this Year என்னும் பெயரில் வீடியோ ஒன்றினை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இவ் வீடியோவில் அந்த வருடத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பு அடங்கியிருக்கும்.

எனினும் வழமைக்கு மாறாக இவ் வருடம் குறித்த வீடியோவினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது யூடியூப்.

இந்த வருடம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல அசம்பாவிதங்கள் உட்பட ஏராளமான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் கடினமான விடயங்களாகவே காணப்படுகின்றன.

எனவே இந்த அனைத்து விடயங்களையும் உள்ளடக்குவது மிகவும் கடினம் என்பதாலும் பயனர்களை புண்படுத்தும் என்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனை யூடியூப் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்