பயனர்கள் தமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதுடன், எடிட் செய்து நண்பர்கள், குடும்பத்தவர்களுடன் பகிர்ந்து மகிடும் சேவையை கூகுள் போட்டோஸ் தருகின்றது.
இதில் இதுவரை காலமும் வரையறை இன்றி இலவசமாக எவ்வளவு போட்டோக்களும் தரவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தது.
எனினும் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து இவ் வசதி மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி 15GB வரையிலான புகைப்படங்களை மாத்திரமே இலவசமாக பதிவேற்றம் செய்ய முடியும்.
மேலதிக படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனின் கட்டணம் செலுத்தி மேலதிக இட வசதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்த மேலதிக சேமிப்பு வசதியினை Google One சேவையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.