ஒன்லைன் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் வசதியினை கூகுள் ட்ரைவ் வழங்கி வருகின்றது.
இங்கு பதிவேற்றப்படும் கோப்புக்களை Encrypt செய்து பதிவேற்றுவதும் வழக்கமாக இருக்கின்றது.
இவ்வாறான கோப்புக்களில் உள்ள தகவல்களை மற்றவர்கள் இலகுவாக பார்வையிட முடியாது.
காரணம் இக் கோப்புக்களை Decrypt செய்ய வேண்டியது அவசியமாகும்.
எனினும் Encrypt செய்யப்பட்ட கோப்புக்களை நேரடியாகவே பார்வையிடக்கூடிய வசதி கூகுள் ட்ரைவில் தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் ட்ரைவ் அப்பிளிக்கேஷனிலேயே இவ் வசதி தரப்படவுள்ளது.
எனினும் இவ் வசதி தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.