யாகூ மின்னஞ்சலில் இனி இச் சேவையினைப் பயன்படுத்த முடியாது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
15Shares

மின்னஞ்சல் சேவைகளில் Automatic Email Forward எனும் வசதி வழங்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

அதாவது பெறப்பட்ட மின்னஞ்சல் ஒன்றினை பிறிதொரு மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் அனுப்புவதாகும்.

இச் சேவையினை யாகூ நிறுவனம் நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது யாகூ சேவையினை இலவசமாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மாத்திரம் இச் சேவை நிறுத்தப்படவுள்ளது.

மின்னஞ்சல்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் ஹேக்கிங் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவே இம் முடிவினை யாகூ நிறுவனம் எடுத்துள்ளது.

இதன்படி அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதிலிருந்து இவ் வசதி நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாகூ நிறுவத்தினை வாங்கியுள்ள Verizon நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் மாதாந்தம் 3.49 டொலர்கள் அல்லது வருடத்திற்கு 34.99 டொலர்கள் கட்டணம் செலுத்தி யாகூ சேவையினைப் பெறுபவர்களுக்கு இவ் வசதி தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்