ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களாக ஐபோன்கள் மற்றும் ஐபேட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் அந்நிறுவனமும் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த வரிசையில் தற்போது 100 புதிய ஈமோஜிக்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றினை iOS 14.2 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் என்பவற்றில் பயன்படுத்த முடியும்.

எனவே புதிய iOS 14.2 பதிப்பினைப் பெறுவதற்கு பின்வரும் படிமுறைகளை கையாளவும்.

ஐபோன் அல்லது ஐபேட்டில் General எனும் பகுதிக்கு சென்று Software Update என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது இயங்குதளம் அப்டேட் செய்யப்பட ஆரம்பிக்கும்.

இயங்குதளம் அப்டேட் செய்யப்பட்டதும் புதிய ஈமோஜிக்களையும் பயன்படுத்த முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்