வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் மற்றும் வீடியோ கொன்பரன்ஸ் போன்றவற்றிற்கு உதவும் சேவையாக Google Meet காணப்படுகின்றது.
இச் சேவையினை மொபைல் அப்பிளிக்கேஷன்களில் பயன்படுத்த முடிவதுடன், இணையப் பக்கத்திலும் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு இணையப் பக்கத்தில் பயன்படுத்தப்படும் Google Meet சேவையில் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது.
அதாவது பயனர்கள் தாம் விரும்பிய பின்னணியை (Background) உருவாக்கிக்கொள்ள முடியும்.
முன்னர் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இவ் வசதியினை தற்போது விண்டோஸ், மேக் கணினிகளில் Chrome OS, Chrome Browser என்பவற்றில் பயன்படுத்த முடியும்.
அதேபோன்று மொபைல் சாதனங்களில் Virtual Background வசதியானது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.