ஆசிரியர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இலவசமாக அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஆப்பிள் இலவசமாக Online Coding வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது ஆசிரியர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swift எனப்படும் புரோகிராம் மொழியினைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் இவ் வசதியினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அனைவரும் அப்பிளிக்கேஷன்களை உருவாக்கக்கூடிய வகையில் ஆப்பிள் நிறுவனம் இவ் வசதியினை வடிவமைத்துள்ளது.

குறிப்பாக கணினி விஞ்ஞானத்துறையில் கல்வி கற்பவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் முதல் உலக அளவில் லொக்டவுன் நிலமை காணப்பட்டமையினால் ஒன்லைன் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.

இதனால் இப் புதிய வசதிக்கு ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்