ட்ரோன் விமானங்களின் உதவியுடன் 5G வலையமைப்பு: அதிரடி காட்டும் சாம்சுங்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

எதிர்காலத்தில் 5G வலையமைப்பினை கண்காணிக்க ட்ரோன் விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதற்கான வெள்ளோட்டத்தில் சாம்சுங் நிறுவனம் வெற்றியும் கண்டுள்ளது.

தற்போது தொலைத்தொடர்பு கோபுரங்களை மனிதர்களே நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.

எனினும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின்போது ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதாவது பணியாளர்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டே இப் புதிய முறை கையாளப்படவுள்ளது.

இத் தொழில்நுட்பத்தின் மூலம் தொலைத்தொடர்பு கோபுரங்களின் உணரிகளை துல்லியமாக கண்காணிக்க முடிவதுடன், அவற்றினை கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

இதனை விளக்கக்கூடிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்