சைபர் தாக்குதல்களுக்கு LinkedIn தளத்தினை பயன்படுத்தும் ஹேக்கர்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அண்மைக்காலமாக ஹேக்கர்களின் அட்டகாசம் வெகுவாக அதிகரித்துள்ளது.

எனினும் ஹேக் செய்யப்படக்கூடிய பல வழிகள் தற்போது தடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹேக்கர்கள் புதிய வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது LinkedIn எனும் சமூகவலைத்தளத்தினை பயன்படுத்த ஆரம்பத்துள்ளனர்.

இத் தளத்தினைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் தகவல்களை திருடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐரோப்பாவின் சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

இவ்வாறான தாக்குதல்களுக்கு LinkedIn தளத்திலிருந்து நீக்கப்பட்ட கணக்குகள் மீளவும் பயன்படுத்தப்பட்டுவருவதாக LinkedIn நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கணக்குகள் ஊடாக வைரஸ் புரோகிராம்கள் கொண்ட தனிப்பட்ட குறுஞ்செய்திகள் அனுப்புவதன் ஊடாகவே தகவல்களை திருடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்