யூடியூப் வீடியோ பிளேயரில் பச்சை நிறம் தோன்றுகின்றதா? சரிசெய்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்று யூடியூப் தளத்தின் ஊடாகவே அதிகமானவர்கள் வீடியோவினை பார்வையிடுகின்றனர்.

அந்த அளவிற்கு பல்வேறு துறைகள் சார்ந்த வீடியோக்களை கொண்ட ஒரு தளமாக யூடியூப் விளங்குகின்றது.

இப்படியான நிலையில் சில சமயங்களில் வீடியோக்களை பார்வையிடும்போது திரையானது பச்சை நிறத்தில் தோன்றுவதுடன் பின்னணி ஒலி மாத்திரம் கேட்கக்கூடியதாக இருக்கும்.

இச் சந்தர்ப்பத்தில் வேறு இணைய உலாவிகளைப் பயன்படுத்தி குறித்த வீடியோவினை பார்வையிட முயற்சிக்கலாம்.

இது பயனளிக்காத சந்தர்ப்பத்தில் குரோம் உலாவியினைப் பயன்படுத்துபவர்கள் Settings சென்று Advanced என்பதில் System என்பதை தெரிவு செய்து Use hardware acceleration when available என்பதை Turn Off செய்யவும்.

இச் செயன்முறையும் வெற்றியளிக்காதுவிடின் கணினியில் பயன்படுத்தும் கிராபிக்ஸ் ட்ரைவரின் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்