பயனர்களுக்கு உதவும் கூகுள்: எப்படி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி இணைய தேடுபொறி சேவையை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் மேலும் பல பயனுள்ள சேவைகளை பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியினை வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி தற்போதைய கொரோனா பரவல் நிலை காரணமாக மக்கள் அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இதற்கான அறிகுறிகள் தென்படுமிடத்து கொவிட்-19 தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய இடங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதன் அடிப்படையில் அண்மையில் உள்ள இடத்திற்கு சென்று பயனர்கள் பரிசோதனை மேற்கொள்ள முடியும்.

இவ் வசதியானது கூகுள் தேடல், கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் மேப் என்பனவற்றில் தரப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்