யூடியூப்பில் ட்ரென்டிங் வீடியோ எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அண்மைக்காலமாக ட்ரெண்டிங் என்ற வார்த்தையானது இணைய உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

குறிப்பாக யூடியூப் வீடியோக்களில் இவ் வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.

உலக அளவில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை பயனர்கள் இலகுவாக அறிந்துகொள்ள இந்த ட்ரென்டிங் வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.

அதேநேரம் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒவ்வொரு தடவையும் ட்ரெண்டிங் வீடியோக்கள் அப்டேட் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

இதன் காரணமாக முன்னணியில் உள்ள ஒரு வீடியோ குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் பின்வரிசைக்கு செல்லலாம்.

அதேபோன்று பின்வரிசையில் உள்ள ஒரு வீடியோ முன்னணிக்கு வரலாம்.

அல்லது புதிய வீடியோ ஒன்று ட்ரென்டிங் வரிசையில் இடம்பிடிக்கலாம்.

ஒரு வீடியோவானது ட்ரென்டிங வரிசையில் இடம்பிடிப்பதற்கு சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன்படி பார்வையிடப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை, பார்வைகளை எவ்வளவு வேகமாக உருவாக்குகின்றது?

யூடியூப்பிற்கு வெளியே இருந்து கிடைக்கும் பார்வைகளின் எண்ணிக்கை, வீடியோ உள்ளடக்கம் இலக்குவைத்துள்ள வயதுப் பிரிவு, அதே சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட மற்றைய வீடியோக்களை விடவும் எவ்வாறு தற்போதைய வீடியோ பார்வையிடப்படுகின்றது என்பது தொடர்பான ஒப்பீடுகள் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டே ஒரு வீடியோ ட்ரென்டிங் வரிசையில் இடம்பிடிக்கின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்