கூகுள் குரோமில் Cast Your Screen வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது ஒன்லைன் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றினை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதில் விரும்பிய நேரத்தில் விரும்பிய நிகழ்ச்சி அல்லது விரும்பிய திரைப்படத்தினை உயர் தரத்தில் பார்வையிடக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இணைய உலாவிகளில் பார்வையிடும் இந்நிகழ்ச்சிகளை அதே நேரத்தில் தொலைக்காட்சிகளிலும் பலபேர் பார்வையிடக்கூடியதாக மாற்றியமைக்க முடியும்.

இதற்காக குரோம் உலாவியில் Cast Your Screen எனும் வசதி தரப்பட்டுள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு கூகுள் குரோமின் வலது பக்க மேல் மூலையில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்து மெனுவினைப் பெற வேண்டும்.

அம் மெனுவில் உள்ள Cast என்பதை கிளிக் செய்து தோன்றும் Pop-Up விண்டோவில் இணையக்க வேண்டிய சாதனத்தினை கிளிக் செய்ய வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்