அன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் எழுத்துருவின் அளவினை மாற்றுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

குரோம் உலாவியில் இணையப் பக்கங்களை பார்வையிவதற்கு ஒரு பொதுவான அளவில் எழுத்துருக்கள் தரப்பட்டிருக்கும்.

எனினும் அவரவர் தேவைக்கு ஏற்ப எழுத்துருக்களின் அளவினை பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும்.

இதற்கான வசதி குரோம் உலாவியிலேயே தரப்பட்டுள்ளது.

முதலில் குரோம் உலாவியினை திறந்துகொள்ள வேண்டும்.

அதன் பின்னர் 3 புள்ளிகளின் மீது கிளிக் செய்து மெனுவினை பெற வேண்டும்.

மெனுவில் Settings பகுதிக்கு சென்று அங்கு Accessibility என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

இதன் போது தோன்றும் பக்கத்தில் Text scaling என்பதன் கீழ் உள்ள சிலைடரை வலது புறமாக அசைப்பதன் மூலம் எழுத்துருக்களை பெரிதாக்க முடிவதுடன், இடது புறமாக அசைப்பதன் மூலம் எழுத்துருக்களை சிறிதாகவும் மாற்றியமைக்க முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்