கூகுள் குரோமில் ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களை வேகமாக தரவிறக்கம் செய்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

குரோம் உலாவியின் ஊடாக தேவையான கோப்புக்களை தரவிறக்கம் செய்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

எனினும் ஒன்றிற்கு மேற்பட்ட நீண்ட கோப்புக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும்போது நீண்ட நேரம் எடுக்கும்.

இதனை தவிர்ப்பதற்கு தரவிறக்க வேகத்தினை அதிகரிக்க முடியும்.

இவ் வசதியானது குரோம் உலாவியிலேயே தரப்பட்டுள்ளது.

குரோம் உலாவியினை திறந்து முகவரிப் பட்டையில் Chrome://flags என தட்டச்சு செய்து Enter செய்யவும்.

அதன் பின்னர் “Parallel downloading” என தேடல் செய்து Enable செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து குரோம் உலாவியினை மீளவும் இயக்குவதன் ஊடாக பலாபலனை அடைய முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்