குரோம் உலாவியில் இணையப் பக்கங்களை Zoom செய்து பார்ப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மொபைல் சாதனங்களில் இணையப் பங்கங்களின் அளவு சிறிதாக காணப்படுவதனால் பார்வையிடுவதற்கு சிரமமாக இருக்கலாம்.

எனவே Zoom செய்து பார்வையிடக்கூடியவாறு இருந்தால் சிறப்பாகும்.

எனினும் மொபைல் சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இணையப் பக்கங்களை சாதாரண முறையில் Zoom செய்து பார்க்க முடியாது.

இவ்வாறான இணையப் பக்கங்களுக்கு குரோம் உலாவியில் தரப்பட்டுள்ள Force enable zoom வசதியினைப் பயன்படுத்த வேண்டும்.

இவ் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு குரோம் உலாவியின் மெனு பகுதிக்கு செல்ல வேண்டும்.

அங்கு Settings என்பதில் Accessibility ஐ தெரிவு செய்யவும்.

அப் பகுதியில் உள்ள Force enable zoom என்பதற்கு எதிரே உள்ள சதுரத்தினுள் சரி அடையாளம் இடவும்.

இப்போது எந்தவொரு இணையப் பக்கத்தினையும் Zoom செய்து பார்வையிட முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்