குரோம் உலாவியில் கூகுளை பிரதான தேடுபொறியாக மாற்றியமைப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது யாகூ, கூகுள், யான்டெக்ஸ், பிங் என பல்வேறு தேடுபொறிகள் பாவனையில் உள்ளன.

இவற்றில் கூகுள் தேடுபொறியே மிகவும் வேகம் கூடியதாக காணப்படுகின்றது.

எனவே அனைவரும் தமது உலாவியில் கூகுளையே பிரதான தேடுபொறியாக (Default) பயன்படுத்த விரும்புகின்றனர்.

இதனை பின்வரும் படிமுறைகள் ஊடாக மாற்றியமைக்க முடியும்.

முதலில் கூகுள் குரோமினை ஓப்பின் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் 3 புள்ளிகளை அழுத்தி மெனுவினை பெற வேண்டும்.

அம் மெனுவில் உள்ள Settings எனும் பகுதியில் உள்ள Search Engine என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்போது தோன்றும் மெனுவில் Google என்பதை தெரிவு செய்யவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்