கூகுள் குரோமில் Data Saver/Lite Mode வசதியை செயற்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணைத்தளங்கள் அதிக வேகமாக தரவிறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும்போது டேட்டாவின் பாவனையும் அதிகமாகவே இருக்கும்.

அன்லிமிட்டட் டேட்டா தரப்படாத நாடுகளில் இது ஒரு பிரச்சினையாகவே காணப்படுகின்றது.

இதனால் அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோம் உலாவியில் Data Saver/Lite Mode எனும் வசதி தரப்பட்டுள்ளது.

இவ் வசதியினை செயற்படுத்துவதன் மூலம் குரோம் உலாவியானது தேவைக்கு ஏற்றாற்போல் டேட்டாவின் அளவினை கட்டுப்படுத்தி பயன்படுத்திக்கொள்ளும்.

இதனைச் செயற்படுத்துவதற்கு அன்ரோயிட் சாதனங்களில் குரோம் உலாவியினை முதலில் ஓப்பின் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் மேல்பக்கமக வலது புறத்தில் காணப்படும் 3 புள்ளிகளை கிளிக் செய்து மெனுவினை திறக்க வேண்டும்.

அப் பகுதியில் Settings என்பதில் Data Saver/Lite Mode என்பதை கிளிக் செய்து On செய்துகொள்ள வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்