டிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

உலக அளவில் பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் அப்பிளிக்கேஷனாக TikTok காணப்படுகின்றது.

இதன் தாய் நிறுவனமாக சீனாவை சேர்ந்த ByteDance நிறுவனம் காணப்படுகின்றது.

அத்துடன் ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய கோர்பரேட் நிறுவனமாகவும் திகழ்கின்றது.

இந்நிலையில் இந்தியாவில் மற்றுமொரு கோர்பரேட் நிறுவனத்தினை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவல் தொழில்நுட்ப சேவையினை வழங்கக்கூடிய வகையிலேயே இந்த கோர்பரேட் நிறுவனத்தின் உருவாக்கம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பீஜிங்கில் உள்ள ByteDance நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்