இணைய உலாவியில் Cache அளவினை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
62Shares

இணைய உலாவிகளின் Cache எனப்படுவது ஒரு சேமிப்பகம் ஆகும்.

இதன் அளவானது இணையப் பக்கங்கள் தரவிறங்குவதற்கான வேகத்தினை தீர்மானிக்கின்றது.

இப் பகுதியில் Images, Videos, CSS, Javascript போன்ற மேலும் சில இணையப் பக்கங்களுக்கான வளங்கள் சேமிக்கப்படும்.

ஒரு இணைப் பக்கத்தின் வளங்கள் சில Cache பகுதியில் சேமிக்கப்பட்டிருந்தால் அவ் இணையப்பக்கத்திற்கு மறுபடியும் பயணிக்கும்போது வேகமாக தரவிறக்கம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.

எனினும் Cache சேமிப்பகத்தின் அளவு சிறியதாக இருப்பதனால் குறைந்தளவு வளங்களே சேமிக்கப்பட முடியும்.

இதனால் Cache சேமிப்பகத்தின் அளவு முழுமையடைந்த பின்னர் இணையப்பக்கங்கள் தரவிறங்கும் வேகம் மந்தப்படுத்தப்படும்.

இதற்கு தீர்வாக Cache சேமிப்பகத்தினை துப்பரவு செய்து பயன்படுத்த முடியும்.

அவ்வாறில்லாமல் Cache அளவினை அதிகரிக்கும் வசதியும் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளில் தரப்பட்டுள்ளன.

இவற்றினை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

கூகுள் குரோம் உலாவியில் இம் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு டெக்ஸ்டாப்பில் உள்ள குரோமின் Shortcut இன் மீது Right Click செய்து தோன்றும் மெனுவில் Properties என்பதை தெரிவு செய்யவும்.

தோன்றும் விண்டோவில் Target எனும் பகுதியில் உள்ள எழுத்துக்களின் இறுதியில் --disk-cache-size=1073741824 என்பதை சேர்க்கவும்.

இப்போது OK பொத்தானை அழுத்தவும்.

குறிப்பு:- இவ் வசதியானது குரோமியத்தினை அடிப்படையாகக் கொண்டு இணைய உலாவிகளில் மாத்திரமே வெற்றியளிக்கும்.

மொஸில்லா நிறுவனத்தின் Firefox உலாவியில் இம் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு உலாவியை செயற்படுத்தி about:config என முகவரிப் பட்டையினுள் தட்டச்சு செய்து Enter செய்யவும்.

தோன்றும் பக்கத்தில் Accept the Risk and Continue என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது தோன்றும் பக்கத்தில் browser.cache.disk.smart_size.enabled என்பதை தேடி True என காண்பிக்கப்படுவதை False என மாற்றி உலாவியை மீண்டும் இயக்கவும்.

மீண்டும் இயக்கிய பின்னர் திரும்பவும் about:config என முகவரிப் பட்டையினுள் தட்டச்சு செய்து Enter செய்து browser.cache.disk.capacity என்பதை தேடவும்.

காண்பிக்கப்படும் பெறுபோற்றில் உள்ள பென்சில் வடிவிலான உருவினை கிளிக் செய்து பெறுமதியை அதிகரித்து சேமிக்கவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்