ஜிமெயிலின் கடவுச் சொல்லினை மாற்றுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
30Shares

இன்று மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு ஸ்மார்ட் கைப்பேசி பாவனையில் அனேகமான வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கு மின்னஞ்சலின் அவசியம் காணப்படுகின்றது.

எனினும் இவ்வாறு மின்னஞ்சல்களை பயன்படுத்தும்போது ஹேக்கர்களின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய சாத்தியமும் உள்ளது.

இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மின்னஞ்சல்களின் கடவுச் சொல்லை அவ்வப்போது மாற்றிக்கொள்வது சிறந்ததாகும்.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்.

இதற்கிணங்க கூகுளின் ஜிமெயில் சேவையை பயன்படுத்துபவர்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது தொடர்பாக பார்க்கலாம்.

முதலில் கூகுள் கணக்கினுள் Sign in ஆக வேண்டும்.

பின்னர் Account என்பதில் Security Setting ஐ தெரிவு செய்யவும்.

இங்கு Password என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது மீண்டும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்யுமாறு கேட்கும்.

கடவுச் சொல்லை உள்ளீடு செய்ததும் புதிய கடவுச் சொல்லை மாற்றம் செய்யும் பகுதி தென்படும்.

இங்கு புதிய கடவுச் சொல்லினை இரு தடவைகள் உள்ளீடு செய்து Change Password என்பதை கிளிக் செய்யவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்