இணைய இணைப்பு இல்லாதபோது Google Drive, Docs மற்றும் Sheets என்பவற்றினை பயன்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
10Shares

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேமிப்பு வசதியான Google Drive, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருட்ளுக்கு மாற்றீடான Google Docs மற்றும் Google Sheets என்பவற்றினை பயன்படுத்துவதற்கு இணைய இணைப்பு அவசியம் ஆகும்.

எனினும் இணைய இணைப்பு இல்லாத சூழ்நிலைகள் மற்றும் இணைய வேகம் குறைந்த இடங்களில் இச் சேவைகளைப் பயன்படுத்துவது சிரமமாகும்.

இப் பிரச்சினைக்கு தீர்வாக Offline Mode வசதியினை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இணைய இணைப்பு அற்ற நிலையிலும் குறிப்பிட்ட சாதனங்களில் மாத்திரம் இவ் வசதிகளை பயன்படுத்த முடியும்.

இவ் வசதியினைப் பெறுவதற்கு கூகுள் குரோம் உலாவியை திறந்து Sign In செய்திருப்பதை உறுதிப்படுத்தவும்.

தொடர்ந்து drive.google.com/settings எனும் இணையத்தள முகவரிக்கு செல்லவும்.

‘Sync Google Docs, Sheets, Slides & Drawings files to this computer so that you can edit offline’ என்பதை தெரிவு செய்து சரி அடையாளம் இட்டு Done என்பதை கிளிக் செய்யவும்.

இதன்போது Google Docs Offline எனும் கூகுள் குரோம் நீட்சியை நிறுவுமாறு கேட்கப்படின் நிறுவிக்கொள்ளவும்.

அதேபோன்று குறிப்பிட்ட சில Google Docs, Sheets மற்றும் Slides என்பவற்றினை Offline இல் எடிட் செய்து சேமிப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்.

drive.google.com எனும் முகவரிக்கு செல்லவும்.

அங்கு காண்பிக்கப்படும் கோப்புக்களில் Offline இல் எடிட் செய்ய வேண்டிய கோப்புக்களின் மீது Right Click செய்யவும்.

தோன்றும் மெனுவில் Available Offline என்பதை அக்டிவேட் செய்யவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்