கூகுள் நிறுவனமானது அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான தனது தேடல் அப்பிளிக்கேஷனில் (Google Search app) Dark Mode வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
எனினும் இவ் வசதியினைப் பெறுவதற்கு Android 10 அல்லது அதற்கு பின்னரான இயங்குதளப் பதிப்பும், iOS 12 அல்லது அதற்கு பின்னரான இயங்குதளப் பதிப்பும் அவசியம் ஆகும்.
இவ்வாறான பதிப்பினை கொண்ட பயனர்கள் பின்வரும் படிமுறைகளின் ஊடாக Dark Mode வசதியினை பெற முடியும்.
முதலில் Google அப்பிளிக்கேஷனை திறந்து (Open) கொள்ளவும்.
அதன் பின்னர் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் மூன்று புள்ளிகளுடன் கூடிய More என்பதை தெரிவு செய்யவும்.
தற்போது தோன்றும் மெனுவில் Settings என்பதை தெரிவு செய்து General என்பதை கிளிக் செய்யவும்.
இப் பகுதியில் சற்று கீழே செல்லும்போது Theme எனப்படும் வசதி தரப்பட்டிருக்கும்.
இதில் கிளிக் செய்து தோன்றும் உப மெனுவில் Dark என்பதை தெரிவு செய்யவும்.