MS Excel மென்பொருளில் நகல் செய்யப்பட்ட ஒன்றிற்கு மேற்பட்ட தகவல்களை நீக்குவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
6Shares

பல்வேறு கணித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அவற்றினை முகாமைத்துவம் செய்வதற்கும் MS Excel மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

இம் மென்பொருளில் ஒரே தகவல் பல இடங்களில் நகல் (Duplicate) செய்யப்பட்டிருந்தால் அவற்றினை நீக்குவதற்கும் இலகுவான வழிமுறை தரப்பட்டுள்ளது.

இவ் வசதியினைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலில் நகல் செய்யப்பட்ட தகவல்களை பரிசீலிக்க வேண்டிய கலங்களை (Cell) தெரிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் Home > Conditional Formatting > Highlight Cells Rules > Duplicate Values என்பதை தெரிவு செய்யவும்.

அடுத்ததாக தோன்றும் Duplicate Values எனும் சொல்லாடற் பெட்டியில் Values with என்பதில் நகல் செய்யப்பட்ட தகவல்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்பட (Hilights) வேண்டும் என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தவும்.

இப்போது ஹைலைட்ஸ் செய்யப்பட்ட தகவல்களை நீக்குவதற்கு உள்ளடக்கப்பட வேண்டிய கலங்களை தெரிவு செய்யவும்.

அதன் பின்னர் Data > Remove Duplicates என்பதை தெரிவு செய்து Columns என்பதில் எந்தெந்த நிரல்களில் உள்ள நகல்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்