எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்: ஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
31Shares

ஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பாதுகாப்பு கூடியவையாகும்.

இதன் காரணமாக அன்லாக் செய்வதும் சற்று கடினமாகும்.

ஆனால் இதனையும் தாண்டி புதிய ஜெயில்பிறேக் டூல் ஒன்றினை ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்ய முடியும்.

குறிப்பாக iOS 11 இயங்குதளத்திற்கு பிந்தைய பதிப்புக்களைக் கொண்ட ஐபோன்களுக்காக இதனைப் பயன்படுத்த முடியும்.

அதாவது iOS 13.5 இயங்குதளப் பதிப்பினைக் கொண்ட ஐபோன்களையும் அன்லாக் செய்ய முடியும்.

uncOver எனும் ஹேக்கர் குழுவே இதனை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் பொதுப் பயன்பாட்டிற்காக இந்த டூல் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்