தகவல்களை திருடும் கொரோனா வைரஸ் மல்வேர்: எச்சரிக்கைவிடுப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது உலகின் பல நாடுகளில் மரண பயத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் பெயரில் மல்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு coronavirus map எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட இந்த மல்வேர் ஆனது பயனர்களின் தரவுகள் மற்றும் தகவல்களை திருடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வங்கிக் கணக்குகள் மற்றும் கடவுச் சொற்களை திருடக்கூடியதாக காணப்படுகின்றது.

ஒரு வாரத்திற்கு முன்னரே இந்த மல்வேர் உருவாக்கப்பட்டுள்ளதாக மகாராஸ்ரா பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதனை பரப்பக்கூடிய இணைப்பு ஒன்று வாட்ஸ் ஆப்பின் ஊடாக பகிரப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்