பரம்பரையலகிலுள்ள குறைபாடுகளை திருத்தியமைக்கும் பொறிமுறை உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மனிதர்களில் உண்டாகும் பல நோய் நிலைமைகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளும் காரணமாகின்றன.

இக் குறைபாடுகள் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படக்கூடியனவாகும்.

இந்நிலையில் குறித்த குறைபாடுகளை 89 சதவீதம் வெற்றிகரமாக மாற்றயமைக்கக்கூடிய புதிய பொறிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இப் புதிய தொழில்நுட்பமானது Prime Editing என அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் மரபணுக் குறியீடுகளை மாற்றி திரும்ப பதிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இத் தொழில்நுட்பமானது மிகவும் துல்லியமானதாகவும், பல்துறை சார்ந்ததாகவும் இருப்பதாக Broad Institute விஞ்ஞானிகள் குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்