செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக பேஸ்புக்கின் புதிய முயற்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மனிதனுக்கு நிகரான கணினிகளையும், ரோபோக்களையும் உருவாக்குவதில் தொழில்நுட்ப உலகு முனைப்புக்காட்டி வருகின்றது.

இதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கையிலெடுக்கப்பட்டுள்ளது.

இம் முயற்சியில் பேஸ்புக் நிறுவனமும் கால்பதித்துள்ளதுடன் இந்தியாவில் இது தொடர்பான பேட்டி ஒன்றினை ஏற்கனவே அறிவித்திருந்தது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள புரொஜெக்ட்களில் ஆறு புரொஜெக்ட்டினை தற்போது தேர்ந்தெடுத்துள்ளது.

அரசு, கலாச்சாரம் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகள் ஆகிய துறைகளில் இந்த புரொஜெக்ட்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவிப்புக்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த புரொஜெக்ட்டுக்களுக்கான பட்ஜெட் ஆனது 10,00,000 இந்திய ரூபாக்கள் தொடக்கம் 20,00,000 இந்திய ரூபாய்களுக்கு இடையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்